நிபா வைரஸ் தொற்று : களப்பணியில் இறங்கிய 950 அதிகாரிகள்!

#India #Lanka4 #sri lanka tamil news #Virus #Nipah
Dhushanthini K
1 year ago
நிபா வைரஸ் தொற்று : களப்பணியில் இறங்கிய 950 அதிகாரிகள்!

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் 950 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கேரளாவில் இதுவரை நிபா வைரஸ் தொற்றால் 02 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் வைரஸ் பாதிப்பு குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவற்காக கல்வி நிறுவனங்களை அரசு மூடியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நிபா வைரஸ் தொற்றானது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. அசுத்தமான தண்ணீர் பரவலுக்கு உதவி செய்கிறது. 

மேலும் இந்த தொற்று மனிதர்களின் மூளையை தாக்கி மரணத்தை ஏற்படுத்துகிறது.