காதலியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட இளைஞன்! யாழில் சம்பவம்

#SriLanka #Jaffna #BombBlast #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
காதலியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட இளைஞன்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் தாவடி - வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளது.

 குறித்த தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

 உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெட்ரோல் குண்டு தாக்கு நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்ததாகவும், பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்த நிலையில், குறித்த இளைஞன் தனது குழுவினருடன் வந்து இன்று அதிகாலை வீட்டினை தாக்கி சேதப்படுத்தி வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.

 குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4