துறைமுக நகரத்தில் உள்ள உணவகங்களை அகற்ற முடிவு

#SriLanka #Colombo #Port
Prathees
2 years ago
துறைமுக நகரத்தில் உள்ள உணவகங்களை அகற்ற முடிவு

2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கொழும்பு நகரில் உள்ள உணவகங்களை அகற்றவுள்ளதாக அரசாங்க நிதி தொடர்பான குழுவிடம் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 கொழும்பு துறைமுக நகரத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து உணவகங்களும் கொழும்பு துறைமுக நகர பொருளாதாரத்துடன் இணைந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் கீழ் நடத்தப்படுகின்றன.

 பிரதானமாக வெளிநாட்டு முதலீட்டிற்காக கொழும்பு துறைமுக நகரம் உருவாக்கப்பட்ட போது இவ்வாறான உணவகங்களை அமைப்பதற்கான சட்டபூர்வமான தன்மை தொடர்பில் அரசாங்கத்தின் நிதிக்குழு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 2021 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் செப்டம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஒழுங்குமுறைகளை பரிசீலிப்பதற்காக அரசாங்க நிதி தொடர்பான குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.

 அத்துடன், இந்த அனுமதிகளை வழங்குவது மற்றும் நீக்குவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொண்டீர்களா என ஆணைக்குழு உறுப்பினர்களிடம் குழு கேட்டுள்ளது.

 இதன்படி, இந்த விடயம் தொடர்பான தகவல்களை விரைவில் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4