பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தை 76 சதவீதம் பேர் அங்கீகரித்து உள்ளனர்

#India #Prime Minister #Minister #2023 #Tamilnews #NarendraModi
Mani
1 year ago
பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தை 76 சதவீதம் பேர் அங்கீகரித்து உள்ளனர்

உலகளவில் அதிக செல்வாக்கு பெற்ற தலைவராக பிரதமர் நரேந்திர மோடி விளங்குவதாக ஆய்வொன்றில் தகவல் வெளியான நிலையில் அவருக்கு பா.ஜ. தலைவர்கள் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த 'மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு உள்ள செல்வாக்கு தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதன்படி இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட உலகளவில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். இவரது தலைமையை ஏற்பதாக 76 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் இரண்டாவது இடத்தில் உள்ளார். இது குறித்து பா.ஜ. தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் 'ஜி - 20 உச்சி மாநாட்டுக்கு பின் உலகளவில் அதிக செல்வாக்கு பெற்ற தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார்' என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறுகையில் "சர்வதேச அளவில் நம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் இணையற்ற அடையாளமாக பிரதமர் மோடி விளங்குகிறார்" என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!