முல்லைத்தீவில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு!

#SriLanka #Mullaitivu #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
முல்லைத்தீவில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவில் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணாமல்போனதாக கூறப்பட்ட இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள தென்னங்காணி ஒன்றில் இருந்து குறித்த சடலம் இன்று (16.09) மீட்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு கோம்பாவிலைச் சேர்ந்த 29 வயது இளைஞன் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணாமல்போனதாக  கடந்த 15 ஆம் திகதி உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த இளைஞன் இன்று தென்னங்காணி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4