விக்டோரியா பகுதியில் பல வெடிபொருட்கள் மீட்பு

#SriLanka #Police #Weapons #kandy
Prathees
2 years ago
விக்டோரியா பகுதியில் பல வெடிபொருட்கள் மீட்பு

கண்டி பதியபலெல்ல வீதியின் 16வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் உள்ள விக்டோரியா சரணாலயத்தில் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 03 கைக்குண்டுகள், ஒரு விமான எதிர்ப்பு தோட்டா, 09 தானியங்கி துப்பாக்கி தோட்டாக்கள் உட்பட பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 தலத்துஓயா பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை செயலிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4