நண்பர்கள் உதவியுடன் நினைத்த காரியத்தை முடிக்கும் மிதுன ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
நண்பர்கள் உதவியுடன் நினைத்த காரியத்தை முடிக்கும் மிதுன ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பரணி: உறவினர்கள் ஆதரவால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். செயலில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் திட்டம் ஒன்று நிறைவேறும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ரோகிணி: உங்கள் புத்தி சாதுர்யம் வெளிப்படும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். மிருகசீரிடம் 1,2: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள். சொத்து விவகாரத்தை பேசி தீர்ப்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த வருமானம் இன்று வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவாதிரை: நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலை முடிப்பீர்கள். இழுபறியாக இருந்த விஷயம் முடிவிற்கு வரும். புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். உறவினர்களால் உங்கள் செயல் வெற்றியாகும். 

கடகம்

புனர்பூசம் 4: பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். சகோதரர்கள் உங்கள் முயற்சிக்கு உதவி புரிவார்கள். பூசம்: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நீங்கள் ஈடுபடும் செயல் இன்று வெற்றியாகும். ஆயில்யம்: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். 

சிம்மம்

மகம்: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பூரம்: வர வேண்டிய பணம் வசூலாகும். குடும்பத்திற்காக தாராளமாக செலவு செய்வீர்கள். உத்திரம் 1: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். முயற்சி ஆதாயமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

கன்னி

உத்திரம் 2,3,4: குழப்பம் அதிகரிக்கும். இன்று சிந்திக்காமல் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். அஸ்தம்: தேவையில்லாத பிரச்னை உங்களைத் தேடி வரும். பிறரை நம்பி உங்கள் செயல்களை ஒப்படைக்காதீர்கள். சித்திரை 1,2: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். 

துலாம்: 

சித்திரை 3,4: பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். திட்டமிட்ட செயல்கள் இழுபறியாகும். சுவாதி: அடுத்தவரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். அதனால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. விசாகம் 1,2,3: திடீர் செலவுகள் தோன்றும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். பேச்சில் நிதானம் அவசியம். 

விருச்சிகம்: 

விசாகம் 4: உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அனுஷம்: இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். கேட்டை: பிரச்னைகளை சமாளித்து எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பொருளாதார நிலை உயரும். 

தனுசு

மூலம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வருவாய் உண்டு. சங்கடங்கள் விலகும். பூராடம்: புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உண்டாகும். அதற்காக நண்பர்களிடம் யோசனை கேட்பீர்கள். உத்திராடம் 1: வெளி வட்டாரத்தில் உங்கள் செயலுக்கு மதிப்புண்டாகும். பண வரவு திருப்தி தரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: தந்தையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். திருவோணம்: புதிய முயற்சிகள் நன்மையாகும். எதிர்பார்த்தவற்றில் அனுகூல நிலை ஏற்படும். அவிட்டம் 1,2: உங்கள் அணுகுமுறையால் ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் உண்டு. 

கும்பம்

அவிட்டம் 3,4: குடும்ப நலனின் அக்கறை உண்டாகும். வார்த்தையிலும் செயல்களிலும் நிதானம் தேவை. சதயம்: எதிர்பாராத சங்கடங்கள் தோன்றினாலும் அதை சமாளிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: மற்றவரிடம் வீண் விவாதங்கள் வேண்டாம். அதனால் உங்கள் செல்வாக்கிற்கு பாதகம் ஏற்படும். 

மீனம்

பூரட்டாதி 4: குடும்பத்தில் திடீரென நெருக்கடி தோன்றும். எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். மனதில் குழப்பம் கூடும். உத்திரட்டாதி: குடும்பத்தில் சலசலப்பு தோன்றும். அக்கம் பக்கத்தினருடன் சண்டை சச்சரவு உண்டாகும். ரேவதி: நண்பர்கள் உதவியால் ஒரு செயலில் ஆதாயம் காண்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.