சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பிய பயங்கர விபத்து

#SriLanka #Accident
Prathees
2 years ago
சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பிய பயங்கர விபத்து

ஹப்புத்தளை, பண்டாரவளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். 

 இந்த வாகன விபத்து நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

 பண்டாரவளையில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த கார் ஒன்று எதிர் திசையில் வந்த மற்றுமொரு காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

 பண்டாரவளையில் இருந்து வந்த கார் அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகவும், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மற்றைய காருடன் மோதியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

 இதில் காரில் இருந்த சிறுமி படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய காரில் இளைஞர்கள் குழுவொன்று பயணித்துள்ளதுடன், சாரதி மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 

 விபத்தை ஏற்படுத்திய பண்டாரவளை கிரிந்த பிரதேசத்தைச் சேர்ந்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4