குடும்ப நலனுக்காக முக்கிய முடிவை துணிச்சலுடன் மேற்கொள்ளும் துலா ராசியினருக்கான ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
குடும்ப நலனுக்காக முக்கிய முடிவை துணிச்சலுடன் மேற்கொள்ளும் துலா ராசியினருக்கான ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் செயல்கள் வெற்றியாகும். நெருக்கடி நீங்கும். ஆதாய நிலை உண்டாகும். பரணி: நீங்கள் எதிர்பார்த்த ஒரு செய்தி வந்து சேரும். நண்பர்கள் உங்கள் முயற்சிக்கு துணையாக இருப்பார்கள். கார்த்திகை 1: நினைத்ததை சாதிப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் முயற்சி நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும். செயல்கள் லாபமாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். ரோகிணி: தடைகளை எல்லாம் சரி செய்வீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மிருகசீரிடம் 1,2: உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகி சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். அதற்கேற்ற வரவு ஏற்படும். திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் வரும். சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். புனர்பூசம் 1,2,3: சொத்து வகையிலான சிக்கல் தீரும். மகிழ்ச்சி கூடும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்.

கடகம்

புனர்பூசம் 4: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். பூசம்: நெருக்கடிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். ஆயில்யம்: தாய்வழி உறவினரிடம் உண்டான சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.

சிம்மம்

மகம்: செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். சகோதரர்களால் நன்மை கிடைக்கும். பூரம்: பழைய பிரச்னைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உத்திரம் 1: உங்கள் திறமை வெளிப்படும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். கோயில் வழிபாடு நன்மை தரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வரவுகளில் இருந்த தடைகள் அகலும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அஸ்தம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சித்திரை 1,2: சிலருக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். சுவாதி: குடும்ப நலனுக்காக ஒரு முடிவை துணிச்சலுடன் மேற்கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பாராத செலவுகளும் அலைச்சலும் உண்டாகும். எதிரிகளால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். அனுஷம்: வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை உண்டாக வாய்ப்பிருப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. கேட்டை: எதிர்ப்பு விலகும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். திடீர் செலவுகளை சந்திப்பீர்கள்

தனுசு

மூலம்: நிதி நிலையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். விநாயகர் வழிபாட்டில் மனம் செல்லும். பூராடம்: திட்டமிட்டு செயல்பட்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். உத்திராடம் 1: வரவு அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்து லாபம் காண்பீர்கள். திருவோணம்: போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த ஒரு செயலில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். வருமானம் கூடும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சி இன்று நிறைவேறும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சதயம்: நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் வரும். வாழ்க்கைத் துணையுடன் உண்டான பிரச்னை நீங்கும். பூரட்டாதி 1,2,3: நிறைவேறாது என்று நீங்கள் நினைத்திருந்த ஒரு முயற்சி இன்று எளிதாக நிறைவேறும்.

மீனம்

பூரட்டாதி 4: செயல்களில் தடை உண்டாகும். அலைச்சல் கூடும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. உத்திரட்டாதி: தேவையற்ற பிரச்னைகளால் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்கள். ரேவதி: உங்கள் முயற்சிக்கேற்ற பலன் உண்டாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.