சூட் கேஸில் வீசப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

#SriLanka #Death #Police #Investigation #Crime
Prathees
2 years ago
சூட் கேஸில் வீசப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிடிகொட பிரதேசத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தண்டுகம் ஓயா கரையில் நீல நிற சூட் கேஸில் வீசப்பட்ட சற்று சிதைந்த ஆண் நபரின் சடலம் மாரவில பிரதேசத்தில் வசிக்கும் வேலைவாய்ப்பு முகவர் ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 உயிரிழந்த நபர் பல்வேறு நபர்களை நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பலரிடம் பலதரப்பட்ட பணத்தை மோசடி செய்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

 இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

 நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய நபர்களுக்கு பயந்து வசிப்பிடத்தை விட்டுத் தப்பிச் சென்றவர் என அண்மையில் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 தண்டுகம் ஓயா கிடிகொட பாலத்தின் கீழ் சூட் கேஸில் குவிக்கப்பட்டிருந்த சடலம் தலை மற்றும் பல இடங்களில் பலத்த காயங்களுடன் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 நீண்ட கூந்தலுடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இறந்த நபர்இ பழுப்பு நிற பேண்ட் மற்றும் கருப்பு டி-சர்ட் அணிந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

 உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4