5000 கோடி நஷ்டத்தை ஈடுகட்ட ஜனவரியில் மீண்டும் மின் கட்டணம் உயரும்!

#SriLanka #Electricity Bill #Power
Prathees
2 years ago
5000 கோடி நஷ்டத்தை ஈடுகட்ட ஜனவரியில் மீண்டும் மின் கட்டணம் உயரும்!

இவ்வருடம் இருமுறை எழுபத்தைந்து வீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் இவ்வருட இறுதியில் ஐயாயிரம் (5000) ரூபாவுக்கும் அதிகமான நஷ்டத்தை ஈடுகட்ட எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

 மின் கட்டணம் ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. 

 தனியார் மற்றும் அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்து 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு செயற்படுவதால் மின்கட்டண அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் இ.போ.சபை நஷ்டத்தையே சந்தித்து வருவதாகவும் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 எனவே, இந்த ஆண்டு எஞ்சியுள்ள மூன்றரை மாதங்களில் மின் கட்டண உயர்வு இருக்காது என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபைக்கு இதுவரை ஏற்பட்ட மொத்த நட்டம் சுமார் 500 பில்லியன் ரூபா எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4