சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை!

#India #Rain #Heavy_Rain #2023 #Tamilnews #ImportantNews
Mani
1 week ago
சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் மாலை மற்றும் இரவு நேரத்தில் திடீரென கனமழை பெய்து வருகிறது. சென்னை மட்டும் இன்றி தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திடீரென மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சென்னை, கோயம்பேடு, சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு