கொலையில் முடிந்த மது விருந்து

#SriLanka #Police #Murder #Crime
Prathees
2 years ago
கொலையில் முடிந்த மது விருந்து

வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாரியகொட உணவகம் ஒன்றினுள் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

 வாரியகொட வெடிச்சந்த கிராமத்தைச் சேர்ந்த 44 வயதான டி. கே. சமன் சோமசிறி என்பவரே இவ்வiறு உயிரிழந்துள்ளார்.

 நேற்று இரவு இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் உணவகம் ஒன்றில் மது அருந்தி கொண்டிருந்தனர்.

 அப்போது, ​​இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

 இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று இரவு வரக்காபொல பொலிஸில் சரணடைந்துள்ளார் அவர் வரக்காபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர். சம்பவ இடத்திற்கு வந்த வரக்காபொல மாவட்ட நீதவான் செல்வி பிரபுத்திகா லங்காங்கனி சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கேகாலை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

 வரக்காபொல பொலிஸ் நிலைய பரிசோதகர் ஏ.டி.சி. பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4