தொடர் கொள்ளைகளில் ஈடுபட்ட இளைஞன்: உறுதுணையாக இருந்த தாயும் கைது

#SriLanka #Police #Robbery
Prathees
2 years ago
தொடர் கொள்ளைகளில் ஈடுபட்ட இளைஞன்: உறுதுணையாக இருந்த தாயும் கைது

ஜாஎல, ஏகல ராஜா மாவத்தையில் நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டை வைத்திருந்த 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது, ​​கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரால் திருடப்பட்ட 9 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்ட 23 வயதுடைய சந்தேக நபர், வாகனத் திருட்டுச் சம்பவங்களுக்கு உறுதுணையாக இருந்த அவரது 56 வயதுடைய தாயார் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்த 33 வயதுடைய வாங்குபவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சந்தேக நபர் பன்னல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் விசாரணையின் போது ஜாஎல உதமித்த பிரதேசத்தில் பெரும் தொகைக்கு வீடொன்றை வாடகைக்கு எடுத்து தனது தாயாரின் உதவியுடன் திருட்டில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 ஜாஎல, கந்தானை, சீதுவ, கட்டான, நீர்கொழும்பு, ரத்தொலுவ, கொச்சிக்கடை ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலை மற்றும் வாகன தரிப்பிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 13 மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டி ஒன்றை சந்தேகநபர் திருடிச் சென்று குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 இதுவரை திருடப்பட்ட பொருட்களில் 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4