சுவிஸ் நாட்டில் வாழும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய வைத்திய தகவல்
தயவு செய்து சமூக பொறுப்போடு இத் தகவலை சுவிஸ் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவி செய்யவும். இது lanka4.com ஊடகத்தின் பிரத்தியேக செய்தியாகும்.
செய்தி:-
50 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் உங்கள் குடல் பரிசோதனையை மேற்க்கொள்ளுமாறு சுவிஸ் வைத்தியர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். எதற்காக இப்பரிசோதனை?
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல நோய்கள் வரும் சாத்தியம் உள்ளது. 50வயதுக்கு மேற்ப்பட்ட பலருக்கு சலரோக நோய் வருவதாலும், சலரோகம் உள்ளவர்களுக்கு ஏதாவது புண், உராய்வுகள் போன்ற அசாதாரண நோய்கள் ஏற்பட்டால் மாற காலம் எடுக்கும் என்பதனாலும், அதிகமானோருக்கு குடலில் புற்று நோய் ஏற்படுவதாலும் முன்கூட்டியே இப்பரிசோதனையை செய்துகொள்வது சிறந்ததாகும்.
இப்பரிசோதனையை அனைத்து வைத்தியர்களும் சிபார்சு செய்வதில்லை. இருப்பினும் நீங்கள் உங்கள் வைத்தியரிடம் கேட்டால் அவர் இதை சிபார்சு செய்வார். சுவிஸ் நாட்டில் மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் இப்பதிசோதனையை சிறிய கமராவை ஆசன வாயினூடாக உட்செலுத்தி பரிசோதிப்பார்கள் செய்வார்கள்.
சுவிஸ் நாட்டில் உங்கள் மருத்துவக் காப்புறுதியின் ஒப்பந்தத்துக்கு அமைய இதற்கான கட்டணத்தை பொறுப்பாக செலுத்தும். இப்பரிசோதனை செய்வற்கு முதல் நாளில் இருந்து நோயாளி கடைப்பிடிக்கவேண்டிய சில நடைமுறைகளை உங்கள் குடலை பரிசோதிக்கும் வைத்திய பிரிவு கடிதம் மூலம் தருவார்கள்.
எனவே 50 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் உடனடியாக உங்கள் வைத்தியரிடம் கேட்டு இப்பதிசோதனையை செய்யவும். குறிப்பாக சலரோக நோய் உள்ளவர்கள் கட்டாயம் செய்வது சிறந்ததாகும்.
இச் செய்தியை மக்களுக்கு கொண்டுசெல்லுமாறு எமக்கு தூண்டுதலாக இருந்த ஒரு பொது நல விரும்பும் பெயர் குறிப்பிட விரும்பாத நபருக்கு எம் lanka4.com ஊடகத்தின் நன்றிகள் உரித்தாகட்டும்.
இதை செய்வதன் ஊடாக மீண்டும் 10 வருடங்கள் இப்பரிசோதனை செய்ய தேவை இல்லை. இப்பரிசோதனையின் ஊடாக பெருங்குடலில் பலருக்கு இருக்கும் சிறிய கட்டிகள் அகற்றப்பட்டு புற்று நோய் வராமல் கட்டுப்படுத்தலாம்.
சிலருக்கு புற்று நோய் இருப்பின் ஆரம்பத்திலேயே முழையில் கிள்ளி அகற்ற முடியும். ஈழ தமிழர்களை பொறுத்தவரை அதிகம் காரம், வெப்பம், எண்ணை உணவை உண்பதாலும்,
பலர் மதுபானம் அருந்திவிட்டு உணவு உண்ணாமல் இருப்பதாலும் கட்டாயம் மக்களே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்பரிசோதனையை செய்யவும்.