வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

#India #Rain #HeavyRain #2023 #Breakingnews #ImportantNews #Cyclone #Gujarat
Mani
1 year ago
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த 17ம் தேதி முதல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடமேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் தீவிரமடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா - தெற்கு ஜார்கண்ட் நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குஜராத், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.