வியாபாரத்தை விரிவு செய்ய ஆலோசிக்கும் சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
வியாபாரத்தை விரிவு செய்ய ஆலோசிக்கும் சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: அலைச்சல் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் தடைகளை சந்திக்க நேரிடும். பரணி: எதிர்பாராத சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். பணியிடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். கார்த்திகை 1: உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். பண வரவில் இருந்த தடைகள் விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். ரோகிணி: பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் ஆதரவால் உங்கள் முயற்சிகள் நிறைவேறும். மிருகசீரிடம் 1,2: தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். உயர்ந்தோர் ஆதரவால் உங்கள் செல்வாக்கு உயரும். திருவாதிரை: விரைந்து செயல்பட்டு ஒரு செயலை முடிப்பீர்கள். தடை பட்டிருந்த வருவாய் வந்து சேரும். புனர்பூசம் 1,2,3: உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். தொழில் கூட்டாளிகளுடன் இருந்த சங்கடம் நீங்கும்.

கடகம்

புனர்பூசம் 4: எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று வந்து சேரும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூசம்: நினைத்தது எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். புதிய சொத்து வாங்குவீர்கள். ஆயில்யம்: உறவினர்களுடன் இருந்த சங்கடம் நீங்கும். பெரியோர் ஆதரவால் ஒரு எண்ணம் நிறைவேறும்.

சிம்மம்

மகம்: தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் தோன்றும் என்றாலும் உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பூரம்: வியாபாரத்தில் மறைமுக தொல்லை அதிகரிக்கும். உங்கள் முயற்சியால் அனைத்தையும் சரி செய்வீர்கள். உத்திரம் 1: பழைய கடன்களால் சங்கடமடைவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்வது குறித்து ஆலோசிப்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும். முன்பை விட லாபம் அதிகரிக்கும். சித்திரை 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பலிதமாகும். எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதியர் ஒருவர் ஒருவரை புரிந்து செயல்படுவீர்கள். சுவாதி: புதிய வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விசாகம் 1,2,3: உறவினர்களின் சுய ரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: திட்டமிடுதலில் குழப்பம் உண்டாகும். நீங்கள் நினைத்ததற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும். அனுஷம்: பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு குடும்பத்தினருடன் பிரச்னைகள் உண்டாகும். கேட்டை: அவசர வேலைக்காக அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

தனுசு

மூலம்: செலவுகள் அதிகரிக்கும் என்பதால் நிதானமாக செயல்படுங்கள். சிக்கனத்தைக் கடைபிடியுங்கள். பூராடம்: அலைச்சல் அதிகரிக்கும். மற்றவரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். உத்திராடம் 1: எதிர்பாராத பயணமும் அலைச்சலும் உண்டாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நட்பின் வழியே உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி மகிழ்ச்சி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். திருவோணம்: நீண்டநாள் நெருக்கடிகள் நீங்கும். எதிர்பாராத வருவாய் வந்து மகிழ்வீர்கள். அவிட்டம் 1,2: உங்களின் முயற்சி நிறைவேறும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: இழுபறியான முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். சதயம்: குடும்பத்தில் உங்களின் செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். பூரட்டாதி 1,2,3: பண வரவில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4: நெருக்கடிகள் விலகும். வரவேண்டிய பணம் வந்து சேரும். பழைய பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீர்கள். உத்திரட்டாதி: நண்பர்கள் ஆலோசனை நலம் தரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். ரேவதி: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் உண்டான சங்கடம் விலகும்.