நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய நட்டஈட்டு தொகை அதிகரிப்பு!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #srilankan politics
Thamilini
2 years ago
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய நட்டஈட்டு தொகை அதிகரிப்பு!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கும் போராட்டகாரர்களால் சேதம் விளைவிக்கப்பட்டது. 

அவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் சேதபடுத்தப்பட்டமைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டு தொகை  1414 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி 31 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே 714 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

மேலும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முழு இழப்பீடு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 700 மில்லியன் ரூபாய் வழங்க வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  நட்டஈட்டை வழங்குவதற்கு மேலும் 200 மில்லியன் ரூபா தேவைப்படும் என்றும் பாராளுமன்ற விவகாரப் பிரிவு கூறியுள்ளது.   

இதேவேளை, போராட்ட காலத்தில் சொத்துக்கள் அழிக்கப்பட்ட 73 உள்ளுர் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் பிரஜைகளுக்கு நஷ்டஈடாக 519 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4