16 அடி ஆழமான குழியில் விழுந்த மாணவியும் அவரது தந்தையும் மருத்துவமனையில்

#SriLanka #Accident #Hospital
Prathees
2 years ago
16 அடி ஆழமான குழியில் விழுந்த  மாணவியும் அவரது தந்தையும்  மருத்துவமனையில்

குடிநீர் குழாய் பதிப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் மோட்டார் சைக்கிள் விழுந்ததில் மாணவியும் அவரது தந்தையும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 நேற்று (19ம் திகதி) கொத்தடுவ ஐ.டி.எச் சந்திக்கு அருகில் நீர் குழாய் அமைப்பதற்காக நீர் வழங்கல் சபையினால் வெட்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து குறித்த பாடசாலை மாணவி யும் அவரது தந்தையும் காயமடைந்துள்ளனர்.

 அவர்கள் 16 அடி ஆழமான குழியில் விழுந்தனர்இ தந்தை தனது மகளை மேற்பரப்பிற்கு கொண்டு வந்தார்.

 குடிநீர் குழாய் உடைந்ததால் இந்த பள்ளம் ஏற்பட்டதாகவும், குழிக்குள் விழுந்த மோட்டார் சைக்கிளின் ஒரு பகுதியை பிடித்து அங்கிருந்தவர்களை வெளியே இழுத்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 குடிநீர் குழாய் உடைந்ததால், அப்பகுதியில் நேற்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4