மது பாவனையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் இரட்டை கொள்கையை பின்பற்றி வருகின்றது

#SriLanka #Sajith Premadasa #drugs #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #beer
Kanimoli
2 years ago
மது பாவனையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் இரட்டை கொள்கையை பின்பற்றி வருகின்றது

புகையிலை மற்றும் மதுபானங்களின் விலைகளை அதிகரிப்பதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்த போதிலும் அரசாங்கம் தனது அரசியல் ரீதியிலான நண்பர்களுக்கு முறைசாரா முறையில் மதுபான உரிமப் பத்திரம் வழங்குவதால் புகையிலை மற்றும் மது பாவனையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் இரட்டை கொள்கையை பின்பற்றி வருகின்றது சில பிரதேசங்களில் விகாரைகளுக்கு அருகில் மதுபான கடைகளை திறக்க உரிமப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுகளுக்கு அமையவே பல பியர் உரிம பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் இன்று (20) கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கத்தில் உள்ள சிலர் கஞ்சா செய்கையை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான ஆவணங்களைத் தயாரித்து வருகின்றனர் என்றும், உலகின் பல நாடுகளில் ஆபத்தான மருந்துகள் என்று பெயரிடப்பட்ட சில போதைப்பொருட்களை இந்நாட்டில் ஊக்குவிக்கப் போவதில் நாட்டின் கலாசாரம் மற்றும் ஒழுக்கவியலிலும் பாதிப்பைச் செலுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 இந்த போதைப்பொருட்கள் ஏலவே சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் அரசாங்கம் என்ற வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை கஞ்சா மற்றும் மதுபானம் மூலம் தான் மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கிறீர்களா என கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்களுக்கு சரியான வரி விதிக்கப்படுவதில்லை என்றும், இதனை நிரூபிக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பான நடைமுறையில் இருக்கும் காலாவதியான சட்டங்களை மாற்றி குறித்த சட்ட விதிகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்றும், கிராமத்தை கட்டியெழுப்பி நாட்டைக் கட்டியெழுப்பவும்,நகரத்தை கட்டியெழுப்பி நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக பியர் உரிமம் விநியோகிப்பதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4