சுவிஸ் விமானப்பயணங்களின் போது கைத்தொலைபேசியை கையாளும் சட்டம்
சுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும் சகஜம்தான்.
ஆனால், பெப்ரவரி 1, 2020 முதல், சுவிஸ் விமானங்களில் பயணிப்போர் தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடுக்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை.
விமானங்கள் வானில் பறக்கும்போது மொபைல் போன் பயன்படுத்தினால், அவை பூமியிலிருக்கும் மொபைல் டவருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்குமாம். அப்படி செய்வதற்காக அதிக சக்தியை அவை பயன்படுத்துவதால், அந்த சக்திவாய்ந்த கதிர்கள் விமானத்தின் இயந்திரங்களுக்கு இடையூறு செய்யுமாம்.
ஆனால், சுவிஸ் விமானங்கள் அனைத்திலும் இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காக Picocells என்னும் போலி மொபைல் டவர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவாம்.
ஆகவே மொபைல் போன்கள் பூமியிலுள்ள டவர்களுடன் இணைய முயல்வதற்கு பதிலாக, இந்த போலி டவர்களுடன் இணைவதால், பிரச்சனை ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், அமெரிக்க சட்டப்படி, அமெரிக்க வான்வழியில் பயணிக்கும் விமானங்களில் மொபைல்களை ஏர்பிளேன் மோடுக்கு மாற்றித்தான் ஆகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.