அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக வழக்கு தொடர 03 கோடிக்கு மேல் வழங்கப்பட்டதா?

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக வழக்கு தொடர 03 கோடிக்கு மேல் வழங்கப்பட்டதா?

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக வழக்குத் தொடர ஐந்து விளையாட்டு சங்கங்களுக்கு மூன்று கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.  

பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டை ஏற்று விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து  ரொஷான் ரணசிங்கவை நீக்குவதற்கு குழுவினர் சதி செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

இதன்படி இன்றைய தினத்தில் (20.09) இருந்து அவர் பதவி விலக வேண்டும் என அறிவிக்கப்பட்டதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4