கடக ராசியினருக்கு சொத்து விவகாரங்கள் முடிவிற்கு வரும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
11 months ago
கடக ராசியினருக்கு சொத்து விவகாரங்கள் முடிவிற்கு வரும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: மனதில் குழப்பம் தோன்றும். மற்றவர்கள் வேலையில் தலையிட்டு ஆலோசனைகள் கூற வேண்டாம். பரணி: அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். கார்த்திகை 1: விழிப்புடன் செயல்படுவதால் விரும்பியதை அடைய முடியும். இழுபறிக்குப் பின் செயல் வெற்றியாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் லாபமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரோகிணி: சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நன்மைகள் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: போட்டியாளர்கள் விலகுவர். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். எதிரிகள் உங்களிடம் சரணடைவார்கள். திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்களை சமாளித்து லாபம் காண்பீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். புனர்பூசம் 1,2,3: தொழிலில் முன்னேற்றமான நிலை உண்டாகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: பிள்ளைகள் நலன் குறித்த முயற்சியில் இறங்குவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். பூசம்: நீங்கள் ஈடுபட்டுள்ள தொழிலில் உங்கள் அணுகுமுறை லாபம் தரும். சொத்து விவகாரங்கள் முடிவிற்கு வரும். ஆயில்யம்: நீங்கள் திட்டமிட்டிருந்த ஒரு வேலை அந்நியர்கள் உதவியுடன் இன்று நிறைவேறும். 

சிம்மம்

மகம்: திடீர் பயணமும் சங்கடமும் உண்டாகும் என்றாலும், அதனால் லாப நிலை ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பூரம்: சந்திக்க நினைத்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நண்பரிடம் உண்டான பிரச்னைகள் தீரும். உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்களை சரி செய்வீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றியடைவீர்கள். 

கன்னி

உத்திரம் 2,3,4: குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகம் குறித்து தைரியமான ஒரு முடிவை எடுப்பீர்கள். அஸ்தம்: முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும். சித்திரை 1,2: உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று தெரிந்து கொள்வீர்கள். 

துலாம்

சித்திரை 3,4: இழுபறியாக இருந்த வேலை முடியும். கணவன் மனைவிக்குள் வேறு நபர்களால் சங்கடம் உண்டாகும். சுவாதி: குடும்பத்தில் அந்நியர் தலையீட்டை அனுமதிப்பதால் சங்கடம் ஏற்படும். கவனம் தேவை. விசாகம் 1,2,3: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் ஆலோசனையை பிறர் ஏற்பார்கள். 

விருச்சிகம்

விசாகம் 4: எளிதாக முடிய வேண்டிய வேலைகளையும் இன்று போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். அனுஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களிடம் வழக்கமான போக்கு இல்லாமல் போகும். மனம் குழப்பமடையும். கேட்டை: நீங்கள் எதிர்பார்த்தவற்றில் தாமதம் உண்டாகும். பிறரது விவகாரங்களில் இன்று தலையிட வேண்டாம். 

தனுசு

மூலம்: அலைச்சல் உண்டாகும். செலவு அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும். பூராடம்: மறைமுக பிரச்னைகள் தொல்லைகளை ஏற்படுத்தும். எதிர்பார்த்தவற்றில் தடைகள் உண்டாகும். உத்திராடம் 1: வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும். திருவோணம்: வரவினை வைத்து பழைய கடன்களை அடைப்பீர்கள். உங்கள் செயல்கள் வெற்றியை ஏற்படுத்தும். அவிட்டம் 1,2: எதிர்பார்த்த பணம் வரும். பிரபலத்தின் உதவியுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளைக் கையாள்வீர்கள். உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும். சதயம்: எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் கைக்கு வரும். மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். பூரட்டாதி 1,2,3: துணிச்சல் அதிகரிக்கும். வேலையாட்களால் ஆதாயம் கூடும். புதிய முயற்சி வெற்றியாகும். 

மீனம்

பூரட்டாதி 4: முயற்சியில் இருந்த தடை விலகும். பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். உத்திரட்டாதி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தேக்க நிலை விலகும். ரேவதி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். நடக்காது என்று நீங்கள் நினைத்திருந்த செயல் இன்று நடந்தேறும்.