நீட் முதுநிலை தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது!
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுக்க பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து இருந்தாலும், முதிநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும்," என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
"நீட் முதுகலை படிப்புகளுக்கான தகுதி சதவீதம் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் தங்களின் விருப்பங்களை திருத்த அனுமதி வழங்கப்படும்."
மேலும், "முதுநிலை கலந்தாய்வுக்கான 3-வது சுற்றுக்கான புதிய அட்டவணை விரைவில் மருத்துவ கலந்தாய்வு குழு வலைதளத்தில் வெளியிடப்படும்," என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.