திரிஷாவின் 'தி ரோட்' டிரைலர் ரிலீஸ்! இணையத்தில் வைரல்

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Director #2023 #Movie
Mani
1 year ago
திரிஷாவின் 'தி ரோட்' டிரைலர் ரிலீஸ்! இணையத்தில் வைரல்

பிரபல தென்னிந்திய நடிகை திரிஷா, நடிப்பில் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி ரோட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். 'தி ரோட்' திரைப்படம் வருகிற அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'தி ரோட்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. திரில்லர் வடிவில் உருவாகியுள்ள இந்த டிரைலர் தற்போது இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!