சிம்ம ராசியினருக்கு உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
11 months ago
சிம்ம ராசியினருக்கு உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். நெருக்கடிகள் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும். கார்த்திகை 1: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். திட்டமிட்டிருந்த பணிகளை முடிப்பீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: தடைகளைத் தாண்டி செயலில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர்கள் என்றாலும் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் தடைகள் உண்டாகும். மிருகசீரிடம் 1,2: முயற்சி இழுபறியாகும். பயணத்தில் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். விழிப்புடன் செயல்படவும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: காலையில் முயற்சியில் எதிர்பார்த்த வெற்றியை காண்பீர்கள். மாலையில் நெருக்கடி தோன்றும். திருவாதிரை: வியாபாரத்தில் கவனமாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உடல் நலனில் அக்கறை அவசியம். புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் துணையுடன் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர்.

கடகம்

புனர்பூசம் 4: எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தினர் ஆதரவுடன் நீண்ட நாள் பிரச்னை ஒன்றில் முடிவைக் காண்பீர்கள். பூசம்: உறவுகளிடம் உண்டான பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். ஆயில்யம்: போட்டியாளர்கள் விலகுவர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கூட்டுத் தொழிலில் லாபம் காண்பீர்கள். 

சிம்மம்

மகம்: துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பூரம்: உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். உத்திரம் 1: எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். 

கன்னி

உத்திரம் 2,3,4: முயற்சியில் தடைகளை சந்தித்தாலும் போராடி வெல்வீர்கள். பொருளாதார நிலை உயரும். அஸ்தம்: விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: குலதெய்வ அருள் கிட்டும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும். 

துலாம்

சித்திரை 3,4: உங்கள் தேவைகள் நிறைவேறும். புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். சுவாதி: யோசிக்காமல் செயல்பட்டு சங்கடங்களுக்கு ஆட்படுவீர்கள். எதிர்பாலினரிடம் எச்சரிக்கை அவசியம். விசாகம் 1,2,3: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற இன்று கடுமையான முயற்சியை மேற்கொள்வீர்கள். 

விருச்சிகம்

விசாகம் 4: பண வரவு கூடும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பெரியோர் ஆதரவு உண்டு. அனுஷம்: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்கள் சேர்க்கை உண்டாகும். கேட்டை: உங்கள் தனித்திறமை வெளிப்படும். குடும்பத்தினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். 

தனுசு

மூலம்: குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். உத்திராடம் 1: செயல்களில் லாபம் காண்பீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் இன்று வந்து சேரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: காலையில் உங்கள் செயல் ஒன்றில் சங்கடம் தோன்றும். மாலையில் நிலைமை சீராகும். திருவோணம்: அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி ஒன்று இழுபறியாகும். மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். அவிட்டம் 1,2: திட்டமிட்ட செயல்களில் கூட எதிர்பார்த்த லாபத்தைக் காண முடியாமல் போகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் செயல்களில் வெற்றி உண்டாகும். மாலையில் திடீர் செலவுகள் தோன்றும். சதயம்: எதிர்பார்த்த பணம் வந்து சேரும் என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். பிரச்னைகள் உங்களைத் தேடி வரும். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். நண்பர்கள் உதவியால் உங்கள் முயற்சி வெற்றியாகும். 

மீனம்

பூரட்டாதி 4: உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்திரட்டாதி: புதிய நட்பால் உங்கள் விருப்பம் நிறைவேறும். மனதில் நம்பிக்கை ஏற்படும். ரேவதி: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும்.