சுவிஸ் நாட்டில் சட்ட விரோத உண்டியல் செய்வோரை, புலனாய்வு செய்யும் இலங்கை புலனாய்வு துறையினர். அச்சத்தில் உண்டியல் செய்வோர்!....

#Switzerland #swissnews #சுவிஸ் செய்தி #சுவிட்சர்லாந்து #லங்கா4 #money #Tamil News #Swiss Tamil News
சுவிஸ் நாட்டில் சட்ட விரோத உண்டியல் செய்வோரை, புலனாய்வு செய்யும் இலங்கை புலனாய்வு துறையினர். அச்சத்தில் உண்டியல் செய்வோர்!....

 இலங்கையின் பொருளாதாரத்தை வெளி நாட்டு அந்நிய செலவாணியால் நிமிர்த்தவும், வெளி நாட்டவர்கள் யாவரும் இலங்கைக்கு பணம் அனுப்புவோரை வங்கியின் ஊடாக அனுப்ப அழுத்தம் கொடுக்கவும், இலங்கை அரசு பல வழிகளில் முயன்று வருகிறது. ஏன் இவ்வளவு பலத்த நாடு கடந்த நடவடிக்கை?

 இலங்கையின் அந்நிய செலவாணி பற்றாக்குறையால் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி பலமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதை நிவர்த்தி செய்ய வெளி நாடுகளில் வாழும் அல்லது வியாபாரம் செய்யும், வேலை செய்யும் மக்கள் தாம் இலங்கைக்கு அனுப்பும் பணத்தை வங்கியூடாக அனுப்பினாலோ, வெளி நாடுகளில் இரு ந் து இலங்கை வம்சாவழியினர் சொத்து அல்லது தொழில் தொடங்க முதலிடும் தொகையை வங்கியூடாக அனுப்பினால் நாட்டின் டொலர் வருவாய் அதிகரித்து சில வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டு நாட்டை முன்னேற்றிவிடலாம். நடப்பது என்ன? 

 வெளி நாட்டிலிரு ந் து இலங்கைக்கு பணம் அனுப்புவோர் பண பெறுமதியை அதிகமாக பெறுவதற்காக உலக நாடுகளில் இரு ந்து சட்ட விரோதமாக பணத்தை துபாய் போன்ற நாடுகளில் வைத்து பண வியாபாரம் செய்யும், சிலரூடாக இலங்கைக்கு அனுப்புகிறார்கள். 

 இதனால் இலங்கைக்கு வங்கியில் வரவேண்டிய பல பில்லியோன் டொலர்கள் கள்ள சந் தையூடாக மற்றப்படுகிறது. இதுவும் இலங்கைக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. 

 வெளி நாடுகளில் இலங்கை அரசின் புலனாய்வு எதற்கு? அவர்கள் சேவைதான் என்ன?

 இலங்கைப் புலனாய்வு பிரிவு தனது புலனாய்வை நாட்டில் மாத்திரம் இல்லாமல் அதிக கள்ளச் சந்தையால் பணம் கடத்தப்படும் டுபாய், சுவிஸ் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளுக்குள் இறக்கியுள்ளது. 

 இதனை அறியும் குழுக்கள் ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் மக்களிடமிருந்தும், நண்பர்கள், உறவினர்களிடமிருந்தும் யார் கள்ள சந்தை ஊடாக பணத்தை கடத்துகிறார்கள் என அறிந்து அவர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை முடக்க அல்லது அழிக்க மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

 இது தொடர்பாக பல வெளி நாட்டில் வாழ்பவர்களுக்கு வட்சப் ஊடாக உதவி கோருவதாகவும் அதற்கு இஸ்லாமியர்களையும் தமிழர்களையும் தேர்வு செய்வதற்காகவும் சட்ட விரோத பணம் கடத்தும் கும்பலுக்கு தரகர்களாக இருப்பவர்கள் ஊடாக முணுமுணுக்கப்படுகிறது.

 இச்செய்தியை உருவாக்க தகவல் தந்த எமது இரகசிய செய்தியாளருக்கு நன்றிகள். மக்களே, வாசகர்களே, ஊடகவியலாளர்களே மக்களுக்கு தேவையான, வருங்கால இளைஞர்களுக்கு தேவையான, வீண் பொய்யில்லாத, மிகைப்படுத்தாத, அடுத்தவர்களை விமர்சிக்காத செய்திகளை எமக்கு அனுப்பவும்.

அது எமது செய்தி ஆய்வாளர்களால் சரி பார்க்கப்பட்டு பிரசிரிக்கப்படும். அதன் லிங் உங்களுக்கு அனுப்பப்படும். விரும்புவோருக்கு அவரவர் பெயரோ புகைப்படங்களோ இணைக்கப்படும். 

 உங்கள் ஆதரவுக்கு நன்றி இச் செய்தி பலர் உதவியோடு ஆராயப்பட்டு லங்கா4.கொம் இல் பிரசுரிக்கிறோம்.

 தகமையான நல்ல செய்திகளை எமக்கு செய்தி தருவோருக்கு ஊதியம் வழங்கப்படும். உண்மையான ஊடக தகமையுள்ள திறன் உள்ளவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் 100% வேலைவாய்ப்பு உண்டு. செய்தி: Lanka4 ஊடகம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!