வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
#India
#Tamil Nadu
#Tamil People
#Rain
#HeavyRain
#2023
#Chennai
Mani
1 year ago
வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு பகுதியில் வரும் 30ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், அது தற்போது ஒருநாள் முன்னதாக அதாவது வரும் 29ஆம் தேதி உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 29ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களுக்குள் மேலும் வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.