தனியார் பேருந்து - முச்சக்கரவண்டி விபத்தில் இளைஞன் பலி: மேலும் ஒருவர் படுகாயம்

#SriLanka #Death #Accident
Prathees
2 years ago
தனியார் பேருந்து - முச்சக்கரவண்டி விபத்தில் இளைஞன் பலி: மேலும் ஒருவர் படுகாயம்

 அக்குரஸ்ஸ - காலி பிரதான வீதியின் ஹெனேகம பகுதியில் தனியார் பயணிகள் பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதியதில் முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 மரகொட தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பசன் மனுஷ கமகே என்பவரே உயிரிழந்துள்ளார். 

 கடந்த 24ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் அக்குரஸ்ஸ - காலி (A17) பிரதான வீதியில் அக்குரஸ்ஸவிலிருந்து காலி நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் காலியிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

 இந்த விபத்தில் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற 19 வயதுடைய நாணயக்கார ஹலொலுவகே திலுஷ சந்தமினா மற்றும் சர்கொட தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த மனுஷ கமகே (17) ஆகிய இரு இளைஞர்கள் படுகாயமடைந்து அக்குரஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனுஷ என்ற இளைஞர் உயிரிழந்தார். 

 அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி எஸ். திரு.சுதுசிங்கவின் பணிப்புரையின் பேரில் அக்குரஸ்ஸ போக்குவரத்துப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதிப் பொலிஸ் பரிசோதகர் ஜினசிறி கருணாசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் சாரதியைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். 

 தனியார் பஸ்ஸின் சாரதி அக்குரஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4