இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்றும் (27.09) முதல் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையே நிலவும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

இதன்படி   மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும்  முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மி.மீ வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து தற்காத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4