அம்பாறை – கல்முனை பகுதியில் சமூகவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு!

#SriLanka #Kalmunai #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அம்பாறை – கல்முனை பகுதியில் சமூகவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு!

அம்பாறை – கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக  முழு அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.  

வீடுகளில் உள்ள அறைகளில் அரைகுறையாக ஆண்கள்,  பெண்களின் உள்ளாடைகள் என்பன சிதறி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

வெளியிடங்களில் இருந்து வருகின்ற சிலரின் சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் பாவனை பாலியல் செயற்பாடுகளுக்கு குறித்த பாலடைந்த வீடுகள் காணப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் இயங்கி வருகின்ற காதி நீதிமன்றத்தை சுற்றி காணப்படுகின்ற வீடுகள் யாவும் கைவிடப்பட்டு சுமார் 19 வருடங்களாக காடாக காணப்படுகின்றது. இந்நிலையில், குறித்த வீடுகளில் விச ஜந்துக்கள், விசப்பாம்புகள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

இவ்வாறாக  கைவிடப்பட்ட வீடுகள் உரிய பராமரிப்புக்கள் இன்மையினால் அதன் அருகில் வாழும் மக்கள் கூட அச்சுறுத்தலினால் இடம்பெயர்ந்து வருகின்றனர். எனவே இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4