சீனாவின் பங்கேற்பு இன்றி கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை எட்ட திட்டமிடுவதாக குற்றச்சாட்டு!

#SriLanka #Lanka4 #IMF #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சீனாவின் பங்கேற்பு இன்றி கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை எட்ட திட்டமிடுவதாக குற்றச்சாட்டு!

இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளின் குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் சீனாவின் பங்கேற்பு இல்லாமல் நாட்டின் கடனை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அழுத்தம் கொடுப்பதாக புளூம்பேர்க்  செய்தி வெளியிட்டுள்ளது. 

அடுத்த மாதம் மொராக்கோவின் மராகேஷில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டத்தின் போது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட முக்கிய கடன் வழங்குநர்கள் குழு இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என உறுப்பினர்கள் விரும்புகின்றனர். 

இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் சுமார் 10% வைத்திருந்த சீனா, குழுவில் அங்கம் வகிக்கவில்லை மற்றும் தனித்தனியான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஐ.எம்.எஃப் பிரதிநிதிகளுடனான இறுதிகட்ட கலந்துரையாடல் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஆகவே இலங்கைக்கு இராண்டாம் தவணை கடன்கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4