கிளிநொச்சியில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

#SriLanka #Kilinochchi #doctor #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கிளிநொச்சியில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

கடந்த 26.06.2023 அன்று தனது மனைவி பிரசவத்திற்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்த பெண்ணின் கணவர், கடந்த 27.06.2023 அன்று சந்திர சிகிச்சை மூலம் இறந்த நிலையில் குழந்தை எடுக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளார். 

அத்துடன் இதன்போது தனது மனைவியின் கர்பப்பையும் அகற்றப்பட்டதாக தெரிவிக்கும் அவர், இதற்கு மருத்துவர்களின் தவறே காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்நிலையில், தனது  வாழ்க்கையில் இனி குழந்தை பாக்கியமே இல்லாத நிலைமைக்கு தனது குடும்பத்தை மருத்துவர்கள் தள்ளிவிட்டார்கள்“ என்றும் பெண்ணின் கணவர் கவலை வெளியிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4