மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்!

#SriLanka #Batticaloa #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் ஓட்டமாவடி – 1 அல் முக்தார் வீதியில் இன்று (27.09) இடம்பெற்றுள்ளது. 

கணவன்,  மனைவி இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடே இச் சம்பவத்துக்கு காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை குளியலறையில் வைத்து கழுத்தை அறுத்தது, கையை வெட்டியதாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள பாதிக்கப்பட்ட பெண் கூக்குரலிட்டபோது அயலவர்கள் வந்து பெண்ணுக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது. 

பலத்த காயங்களுக்கு உள்ளான பெண்  வாழைச்சேனை ஆதார வைத்தியைசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4