12 கோடி பெறுமதியான தங்கத்தை கடத்தி வந்த ஐவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

#SriLanka #Arrest #Airport #Katunayaka
Prathees
2 years ago
12 கோடி பெறுமதியான தங்கத்தை கடத்தி வந்த ஐவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  கைது

சட்டவிரோதமான முறையில் நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை கொண்டு வந்த நான்கு பெண்களும் ஒரு ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இவர்கள் டுபாயில் இருந்து கொண்டு வந்த தங்கத்தின் பெறுமதி சுமார் 12 கோடியே 30 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுகிறது.

 சந்தேகநபர்கள் இரண்டு விமானங்களில் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.

 ஒரு விமானத்தில் இருந்து மூன்று பெண்களும் ஒரு ஆணும் நாட்டை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 மற்றைய பெண்மணி அதிகாலை 05:25க்கு வந்த விமானம் மூலம் நாட்டிற்கு வந்துள்ளார்.

 06 கிலோ எடையுள்ள இந்த நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை உடலிலும் கைப் பைகளிலும் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அடிக்கடி விமானத்தில் செல்லும் தொழிலதிபர்கள் என்று தெரியவந்துள்ளது.

 கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4