கொரிய மொழி விசேட பரீட்சைக்கான விண்ணப்பங்கள் வெளியீடு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொரிய மொழி விசேட பரீட்சைக்கான விண்ணப்பங்கள் வெளியீடு!

கொரிய மொழி விசேட பரீட்சைக்கான விண்ணப்பங்களை 03 நாட்களில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.  

அதன்படி, 2023ம் ஆண்டு தொடர்பாக நடைபெறவுள்ள கொரிய மொழி சிறப்பு தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெளியீடு 04.10.2023 முதல் 06.10.2023 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் முறையின் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. 

 கொரியா மனிதவளத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தகுதி பெற்ற பரீட்சார்த்திகளின் பட்டியல் www.slbfe.lk பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

இத்தேர்வை இந்த ஆண்டு நவம்பர் மாதம் கணினி மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கொரிய மொழி சோதனையானது உற்பத்தி, கட்டுமானம் மற்றும் மீன்பிடித்தல் ஆகிய துறைகள் தொடர்பாக நடத்தப்படுகிறது.  

தென் கொரியாவில் 4 வருடங்களும் 10 மாதங்களும் பணிபுரிந்து மீண்டும் இந்த நாட்டிற்கு திரும்ப விரும்பும் 18-39 வயதுக்கு இடைப்பட்ட இலங்கையர்கள் இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4