'ஜவான்' திரைப்படத்தின் வெற்றிக்கு நடிகர் விஜய் வாழ்த்து

#India #Cinema #Actor #TamilCinema #2023 #Vijay #Tamilnews
Mani
2 years ago
'ஜவான்' திரைப்படத்தின் வெற்றிக்கு நடிகர் விஜய் வாழ்த்து

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் கடந்த 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா படமாக, வெளியான இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 'ஜவான்' திரைப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ.1,004.92 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் 'ஜவான்' படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஜய் X தளத்தில் பதிவிட்டு, 'ஜவான்' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு ஷாருக்கான், அட்லீ மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள். லவ் யூ டூ ஷாருக்கான் சார்" என்று தெரிவித்து உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4