துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் ரிஷப ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
11 months ago
துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் ரிஷப ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: கவனமுடன் செயல்படுவதால் உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பரணி: நினைத்த செயல் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத வரவு உண்டு. கார்த்திகை 1: எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வரும். இழுபறியாய் இருந்த ஒரு வேலை எளிதாக முடியும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: போட்டிகளுக்கு இடையில் துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மகிழ்ச்சி கூடும். ரோகிணி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். தடைபட்டிருந்த செயல்களில் வெற்றி உண்டாகும். மிருகசீரிடம் 1,2: நீங்கள் மேற்கொண்ட பழைய முயற்சிகள் இன்று வெற்றியாகும். எதிர்பார்த்த செய்தி வரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பயணத்தில் எச்சரிக்கை அவசியம். கவனமுடன் செயல்பட்டு ஒரு செயலில் ஆதாயம் காண்பீர்கள். திருவாதிரை: நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: வேலைப்பளு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடகம்

புனர்பூசம் 4: உங்களை அவமதிக்கும் வகையில் சிலரின் நடவடிக்கை இருக்கும் என்றாலும் எண்ணம் நிறைவேறும். பூசம்: பணியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவை இல்லாமல் மற்றவர் செயல்களில் தலையிட வேண்டாம். ஆயில்யம்: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். உங்களைச் சுற்றி இருப்பவர்களால் அமைதி கெடும்.

சிம்மம்

மகம்: செயல்களில் தெளிவு உண்டாகும். நேற்றைய சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். பூரம்: செயல்கள் வெற்றியாகும். பழைய பிரச்னைகளை சமாளித்து வெளியில் வருவீர்கள். உத்திரம் 1: சிலர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்வார்கள். தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் செயல்களில் இன்று வேகமும் விவேகமும் இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். அஸ்தம்: போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். வியாபாரத்தில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். சித்திரை 1,2: உங்கள் செயல்களுக்கு பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டமான நாள்.

துலாம்

சித்திரை 3,4: நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். சங்கடங்களை சமாளித்து வெற்றி அடைவீர்கள். சுவாதி: எதிர்பார்த்தவற்றை போராடி அடைவீர்கள். சிலர் குடும்பத்தினர் அதிருப்திக்கு ஆளாவீர்கள். விசாகம் 1,2,3: உங்கள் முயற்சிகளில் ஏற்பட்ட சிரமம் நீங்கும். இழுபறிக்குப்பின் ஒரு வேலை முடியும்.

விருச்சிகம்

விசாகம் 4: பணியில் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். முதலாளியின் கோபம் உங்கள் மீது திரும்பலாம். அனுஷம்: உங்கள் செயல் மற்றவர்களால் பாராட்டப்படும். நீண்ட நாள் முயற்சி இன்று நிறைவேறும். கேட்டை: வேலைப்பளு அதிகரித்தாலும் உங்கள் எண்ணம் நிறைவேறும். நண்பர்களால் நன்மை அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: தடைபட்டிருந்த வருவாய் உங்கள் கைக்கு வரும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பூராடம்: மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் தனித்திறமை வெளிப்படும். செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: மற்றவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: புதிய முதலீடுகள் பற்றிய எண்ணம் மேலோங்கும் என்றாலும் இன்று அதைத் தவிர்ப்பது நல்லது. திருவோணம்: செயலில் நெருக்கடிகள் தோன்றி சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். வார்த்தைகளில் நிதானம் தேவை. அவிட்டம் 1,2: வரவேண்டிய பணம் வந்து சேரும். யோசித்து செயல்படுவதால் நன்மை உண்டு.

கும்பம்

அவிட்டம் 3,4: எதிர்பாராத தடைகளால் குழப்பம் கூடும். திட்டமிட்டு செயல்படுவதிலும் சங்கடம் தோன்றும். சதயம்: எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் போகும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மறையும். பூரட்டாதி 1,2,3: கவனமாக செயல்படுவீர்கள். வருவாய் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும்.

மீனம்

பூரட்டாதி 4: முயற்சியில் தடைகள் ஏற்படும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை உண்டாகாமல் போகும். உத்திரட்டாதி: வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். ரேவதி: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்பார்த்த செய்தி வரும். தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும்.