முறையான வரி நிர்வாக முறைமை அவசியம்!

#SriLanka #IMF #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
முறையான வரி நிர்வாக முறைமை அவசியம்!

சர்வதேச நாணய நிதியத்தினால் அவதானிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் வரி வருவாயை அதிகரிப்பதற்கு முறையான வரி நிர்வாக முறைமை விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க வலியுறுத்தியுள்ளார். 

அத்தியாவசிய பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,  மக்கள் மீது புதிய வரிகளை சுமத்தாமல் வரி வருமானத்தை அதிகரிக்க நிதி நிதியம் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்தார்.  

அதற்கான 03 பரிந்துரைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.  

வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதை முதலாவதாக நிதி நிதியம் வலியுறுத்தியுள்ளதாகவும்,  வரிச்சலுகைகளை நீக்குவது இரண்டாவது விடயம் எனவும், மூன்றாவது விடயமாக வரி ஏய்ப்பை தவிர்ப்பது குறித்து நிதி நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4