பெர்லின் குளோபல் மாநாடு ஆரம்பமாகுகிறது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பெர்லின் குளோபல் மாநாடு ஆரம்பமாகுகிறது!

புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வு காணும் உயர்மட்ட உலகளாவிய முயற்சியான "பெர்லின் குளோபல்" மாநாடு இன்று (28.09) ஆரம்பமாகவுள்ளது. 

தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அதிகாலை ஜேர்மனி சென்றிருந்தார்.  

ஜேர்மனியின் பேர்லின் நகரில்  இன்றும் நாளையும் (29.09) பல நாடுகளின் அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 மாநாட்டின் முதல் நாளில் அரச தலைவர் கலந்துரையாடலின் ஆரம்ப உரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றவுள்ளார். 

ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் ஜேர்மனியின் உயர்மட்ட அமைச்சர்கள், ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4