டாலர்களை பெற கசிப்பு கஞ்சாவை ஏற்றுமதி செய்வோம் - டயனா கமகே

#SriLanka #Dollar #drugs #Export #liquor #Diana_Gamage
Prasu
2 years ago
டாலர்களை பெற கசிப்பு கஞ்சாவை ஏற்றுமதி செய்வோம் - டயனா கமகே

கசிப்பு கஞ்ஞாவை ஏற்றுமதி செய்வதன் மூலம் டொலர்களை உழைக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

கசிப்புகாரன் கஞ்ஞாகாரன் என மக்களை சுட்டிக்காட்டாமல் கசிப்பு கஞ்சா போன்றவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மதுபானங்களின் விலை அதிகரிப்பால் கள்ளச்சாரயத்தினை மக்கள் வீடுகளில் உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளனர் இது 500 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக வீடுகளில் கள்ளச்சாரயம் தயாரிக்கப்படுவதை தடுப்பதற்காக மதுபானங்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் மூளையை மூளைச்சலவை செய்துள்ளனர் கஞ்சா கள்ளச்சாரயம் பயன்படுத்துபவர்கள் கஞ்சாக்காரர்கள் கசிப்புகாரர்கள் என அழைக்கப்படுகின்றனர்

கஞ்சா கசிப்பு ஆகியவற்றின் பெறுமதியை மக்கள் உணர்வதில்லை எனவும் தெரிவித்துள்ள டயனா கமகே கள்ளச்சாரயம் ரஸ்யாவின் வொட்கா போன்றது எனவும் தெரிவித்துள்ளார். 

 சுத்தமான பழங்களை பயன்படுத்தி கள்ளச்சாரயத்தை தயாரிக்கின்றனர் நாங்கள் அதனை பெருமளவில் உற்பத்தி செய்தால் நாங்கள் அதனை ஏற்றுமதி செய்ய முடியும் நாங்கள் டொலர்களை பெறலாம் நாடாளுமன்றத்தில் இந்த யோசனையை முன்வைக்கவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4