நாட்டில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது

#SriLanka #weather #Lanka4 #HeavyRain #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
2 years ago
நாட்டில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது

நாட்டில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

 இதன்படி பானந்துகம பிரதேசத்தில் இருந்து நில்வளா ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் சிறியளவான வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. தலகஹகொட பிரதேசத்தில் உள்ள நில்வளா ஆற்றின் நீர் மட்டம் அவதான மட்டத்தை எட்டுள்ளது. 

இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. கிங் கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதுடன், பத்தேகம, தவலம பிரதேசங்களில் அவதான மட்டத்தை எட்டியுள்ளது. களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4