ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி : ஒருவர் பலி!

#SriLanka #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி : ஒருவர் பலி!

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று (28.09) காலை இடம்பெற்றுள்ளது. 

கொழும்பில் இருந்து நூர் நகர் நோக்கி பயணித்த ரயிலுடன், மோதியே முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் முச்சக்கர வண்டியின் சாரதியான 66 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம்,  முந்தல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4