லியோ படத்தின் 'BADASS' பாடலின் புரோமோ வீடியோ வெளியானது!

#India #Cinema #TamilCinema #release #2023 #Vijay #Movie
Mani
2 years ago
லியோ படத்தின் 'BADASS' பாடலின் புரோமோ வீடியோ வெளியானது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'லியோ' படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. முன்னதாக, நடிகர் விஜய்யின் பிறந்தநாளில் 'லியோ' படத்தின் முதல் சிங்கிள் வெளியானது.

இந்நிலையில் நேற்று 'லியோ' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, 'பேடஸ்' என்ற பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் BADASS பாடலின் புரோமோ வீடியோ வெளியானது. BADASS பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4