கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் செல்வநகர் பகுதியில் கைது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் செல்வநகர் பகுதியில் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்தில் பயணி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் நேற்று (27.09) மாலை செல்வநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். 

அக்கராயன்குளம் கிழக்கைச் சேர்ந்த 27 வயதுடையவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கடந்த 23ஆம் திகதி பேருந்தில் பயணித்த நபரை பேருந்தில் இருந்து இறக்கி கத்தியால் வெட்டியதோடு, 25ஆம் திகதி ஊத்துப்பாலம் பகுதியில் நபர் ஒருவரை கட்டையால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4