லங்கா4 ஊடக அனுசரணையில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி!

#SriLanka #Jaffna #Srilanka Cricket #Lanka4 #sports #Tamilnews #sri lanka tamil news #Sports News
Mayoorikka
2 years ago
லங்கா4 ஊடக அனுசரணையில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி!

லங்கா4 ஊடக அனுசரணையில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கு யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் கழகங்களிலிருந்தும் வீரர்களை தெரிவு செய்யும் மாபெரும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

 நாளைய தினம் (செப்ரம்பர் 29 ) மல்லாகம் இலங்கை வங்கிக்கு எதிராக உள்ள மண்டபத்தில் குறித்த ஏலம் எடுக்கும் நிகழ்வு காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

 இந்த நிகழ்விற்கு யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து கழகங்களில் இருந்தும் சிறந்த வீரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

 லங்கா 4 இணையத்தளமானது யாழ் மாவாட்டத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் விளையாட்டு துறையினை வளர்ச்சி அடைய செய்யும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்து KKS TIGERS PREMIER LEAGUE மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியினை நடத்தவுள்ளது.

 இதற்கு தகுதியான கழகங்கள் தங்கள் வீரர்களை குறித்த நிகழ்விற்கு அனுப்பி அவர்களை ஊக்குவிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 குறித்த ஏலம் எடுக்கும் நிகழ்வு லங்கா4 இணையத்தளம் ஊடாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/09/1695902824.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4