அம்பலாங்கொடையில் இன்றும் துப்பாக்கிச் சூடு

#SriLanka #Crime #GunShoot
Prathees
2 years ago
அம்பலாங்கொடையில் இன்றும் துப்பாக்கிச் சூடு

மெட்டியகொட குளிகொட வீதியின் மாகவெல பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக மெட்டியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 இன்று காலை 6 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஹிக்கடுவ பலியகுருவைச் சேர்ந்த சமிந்த குமார என்ற 47 வயதுடைய திருமணமான ஒருவரே காயமடைந்துள்ளார். 

 துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து 500 மீற்றர் தொலைவில் 9 மி.மீ ரக 5 உயிருள்ள தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் மெட்டியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

 காயமடைந்த நபர் மெட்டியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவரா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4