கிளிநொச்சியில் இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்: 5 பேர் படுகாயம்

#SriLanka #Kilinochchi #Attack #Crime
Prathees
2 years ago
கிளிநொச்சியில்   இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்: 5 பேர் படுகாயம்

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் பல சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததில் மற்றும் குடியிருப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 05 பேர் காயமடைந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 திருவையாறு பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டுக்குள் ஒரே நேரத்தில் அத்துமீறி நுழைந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

 இதனை பிரதேசவாசிகள் தடுக்க முற்பட்டதில் 5 பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 எவ்வாறாயினும், தாக்குதலை நடத்திய நபர்கள் யார் என்பது இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், அந்த நபர்களால் வீட்டின் சி.சி.டி.வி. சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தாக்குதலுக்கு முன்னர் பிரதேசவாசிகளுக்கும் மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் தாக்குதலின் காரணமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4