வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
#India
#Rain
#HeavyRain
#2023
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#Chennai
#Cyclone
Mani
1 year ago
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. வடகிழக்கு பருவ மழைக்காலம் என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் மற்றும் மியான்மர் கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடலோர பகுதிகளை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.