வெள்ள அபாயத்தில் பிரதான ஆறுகள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

#SriLanka #weather #Rain #Flood
Prathees
2 years ago
வெள்ள அபாயத்தில் பிரதான ஆறுகள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பிரதான ஆறுகளின் நீர்மட்டம் வெள்ள அபாய மட்டத்தில் உள்ளது. 

அவற்றுள், நில்வலா, கிங், மற்றும் களு கங்கையின் சிறிய துணை நதிகள் ஆகியவை பிரதானமானவை.

 எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம் தொடரும் என நீர்ப்பாசன திணைக்கள நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

 அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்தார்.

 கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

 இது தவிர இரத்தினபுரி, அலபாத்த, காலி நெலுவ, நாகொட, வதுரவில மற்றும் களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கல, இங்கிரிய, பஹியங்கல மற்றும் வல்லவிட்ட ஆகிய பிரதேசங்களிலும் அதிக மழை பெய்துள்ளது.

 கடும் மழையுடன் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4